Wednesday 23 September 2015

Navakailayam Details

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும். இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது[1] [2]. இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது.
வரலாறு
அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார் என்றும் அப்படி அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்கள் தான் இப்போது நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுவதாகவும் இத்தலங்களின் வரலாறு கூறுகின்றது.

1. பாபநாசம் - பாபநாசநாதர். - சூரியன். நட்சத்திரம் : கார்த்திகை , உத்திரம்

2. சேரன்மாதேவி - அம்மைநாதர். - சந்திரன். நட்சத்திரம் : ரோகினி ,ஹஸ்தம் , திருவோணம்.


3.  கோடகநல்லூர் - கைலாசநாதர். - செவ்வாய். நட்சத்திரம் : மிருகசிரீடம் , சித்திரை , அவிட்டம்.


4. குன்னத்தூர் (சங்காணி) - கோத்தபரமேஸ்வரர் (கைலாயநாதர்) - ராகு.  நட்சத்திரம் : திருவாதிரை , சுவாதி , சதயம்.

5. முறப்பநாடு - கைலாசநாதர் - வியாழன். நட்சத்திரம் :புனர்பூசம் ,விசாகம் , பூரட்டாதி.

6. ஸ்ரீவைகுண்டம் - கைலாசநாதர் - சனி. நட்சத்திரம் : பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி.

7. தென் திருப்பேரை - கைலாசநாதர் - புதன். நட்சத்திரம் : ஆயில்யம் , கேட்டை , ரேவதி.

8. ராஜபதி - கைலாயநாதர் - கேது. நட்சத்திரம் : அசுவதி , மகம் , மூலம்.

9. சேர்ந்தபூமங்கலம் - கைலாசநாதர் - சுக்கிரன். நட்சத்திரம் : பரணி , பூராடம் , பூரம்.


1.பாபநாசம் - சூரிய தலம் - நவ கைலாயங்களில் முதல் கைலாயம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த அனைத்து பாவங்களையும் தீர்க்க வணங்க வேண்டிய திருத் தலம் இது. கோயிலின் எதிரில் உள்ள தாமிரபரணி நீராடுபவரது அனைத்து பாவங்களையும் தீர்க்கும் புண்ணிய தீர்த்தம். திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ள இத் திருத் தலத்தின் மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர். பொதிகை மலையில் தோன்றும் தாமிரபரணி ஆறு சமவெளியினை அடையும் இடமே பாபநாசம். அகத்திய முனி தங்கி வழிபட்ட இத் திருக்கோயிலின் 80 அடி உயர ராஜ கோபுரம் ஏழு அடுக்குகளை கொண்டது. அகத்திய முனிவருக்கு பெருமான் ரிஷப வாகனத்தில் உமையாளுடன் திருமணக் கோல காட்ச்கியளித்த புண்ணிய தலம் இது. விராட்டு என்பவர்ு மோட்சம் அடைந்த தலம் இது. மூலவர் வயிராச லிங்கம், பழமுறை நாயகர், முக்காளாலிங்கர், பரஞ்சோதிலிங்கர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.






Arulmigu Papanatha Swamy Temple 
Papanasam(suriyan)
TEMPLE HISTORY
       Due to the heavy crowd of sages at Mount Kailash attending the wedding of Lord Shiva with Mother Parvathy, Earth lost its balance. Lord Shiva called Sage Agasthya to go to Pothigai Hills in the South and to balance the Earth level as his single weight was enough for the purpose equaling the weight of the millions of Rishis at Mount Kailash then.
       On the first day of Chithirai month (falling almost on April 14 each year), Lord granted the Wedding Darshan to Sage Agasthya. Lord Papanasanatha graces the Wedding Darshan behind the sanctum sanctorum as Kalyanasundarar on His bull vehicle. Sage Agasthya and his wife Lopamudra are in the shrine worshipping the Lord.


POOJA DETAILS
       Morning Pooja Time : 6.30 A.M - 1.00 P.M
       Evening Pooja Time : 4.30 P.M - 8.00 P.M
       Last Friday and Special Function days Time will be change to Morning 6.00 A.M to Evening 8.00 P.M
       On the Kalapooja Function days Time will be change to
       Morning 6.30 A.M -1.00 P.M
       Evening 4.30 P.M - 8.00 P.M


FESTIVALS
       10 day Brahmmotsavam in Chithirai and the Agasthya wedding festival on the first day of the same month (April-May) and Thaipoosam in January-February are the festivals celebrated in the temple.


       Every year Month of pangunai Therthiruvizha and Toppathiruvizha has been celebrate very grantly.


       Date of chitrai1 chitrai agasthiar peruman wedding function has been celebrate.


       Margalai urchavam,Navarathiri vizha,kanthar sasti ippasi visu,polathira urchavam,sivarathiri
Pooja NamePooja Time
·         Tiruvanathal6.30 A.M
·         Sirukalasanthi7.00 A.M
·         Kalasanthi8.30 A.M
·         Ucchikalam11.00 A.M
·         Sayaratchai6.00 P.M
·         Arthajamam8.00 P.M


        Anusa natchatharam yearly Abisheageam.

2.சேரன் மகாதேவி - சந்திரன் - திருநெல்வேலியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இரண்டாவது நவ கைலாயமாகும். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள இது சந்திரன் ஆட்சி பெற்று விளங்கும் தலமாகும். மூலவர் சுயம்பு மூர்த்தியான " ஸ்ரீ அம்மநாத சுவாமி ", அம்பாள் " ஆவுடை நாயகி ". முன்னொரு சமயம் இத் தல மூலவருக்கான கருவறையை கட்டிட வேண்டி, நெற் குத்தும் தொழில் கொண்ட இரு பெண்கள் காசு சேர்த்து வந்தனர். நீண்ட காலம் ஆகியும் , போதிய பணம் கிடைக்கவில்லையே என எண்ண, சிவ பெருமான் அந்தணர் உருவில் வந்து அவர்களது வீட்டில் உணவருந்தி சென்றார். வீட்டில் செல்வம் பெருகியது. பின்னரே கருவறை கட்டி முடிக்கப்பட்டது. இதை கூறும் வண்ணம் நெற் குத்தும் இரு பெண்டிரின் உருவம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலின் அருகில் யாக தீர்த்தம் ஒன்று உள்ளது. இத் தீர்த்தத்தில் 41 நாட்கள் தொடர்ந்து நீராட தீரா கொடிய நோய்களும் தீர்கிறது.


Arulmigu Kailasanathar(Ammainathar) Temple 
Cheran Mahadevi (Chandran)
TEMPLE HISTORY
       It is to be highly remembered that during all religious important days and the auspicious days for long hours. The temple remains open as per the temple time schedules from early morning to mid-noon and later in the late evening hours to dusk with great devotion and dedication. It is one of the most sought after Lord Shiva temple in this district and southern India. People from far and near visit this particular temple for fulfilling their wish and dreams by praying to this Lord. Special pujas are conducted on the day of Shivarathri at this temple with great devotion and dedication. Swayambu Lingam known as Ammai nathar, Kailasanathar and his consort Avudai Nayaki or Oppilla Nayagi Amman (The one having NO comparision - be it beauty or any things).
       Teertham (Holy water) is River Thamirabarani and the place is considered as Thingal Sthalam (Moon). Other deities in the temple are Vinayakar, Subramanyar, Viswanadhar, Natarajar, Nalwar, Karikal ammaiar, Nava kanniar and Navagraham. Romesa Munivar had darshan of Lord Siva here and was blessed.


POOJA DETAILS
       Morning Pooja Time : 7.00 A.M - 10.00 P.M
       Evening Pooja Time : 5.00 P.M - 6.00 P.M


FESTIVALS
       Every Month Pradhosham celebrated.


        Maha Sivarathiri Grandly Celebrayted.


       Uthara Natchatharam thirukalyanam celebrated.


        Anusa natchatharam yearly Abisheageam.
·         Pooja NamePooja Time
·         Tiruvanathal7.00 A.M
·         Kalasanthi8.00 A.M
·         Ucchikalam9.00 A.M
·         Sayaratchai5.30 P.M
·         Arthajamam6.30 P.M

3. கோடகநல்லூர் - செவ்வாய் - நவக்கிரகங்களில் " செவ்வாய் " ஆட்சி பெற்று விளங்கும் " கோடகநல்லூர் " , திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மூன்றாவது நவ கைலாயமாகும். செவ்வாய் திசை நடக்கும் அனைவரும் தவறாமல் சென்று வழிபட வேண்டிய திருக் கோயில் இது. ரிஷி குமாரர் ஒருவரின் சாபத்தால் பரிஷத் மஹாராஜையும், சனி தோஷத்தால் நள மகாராஜாவையும் தீண்டிய கார்கோடகம் என்ற கரு நீல வண்ண சர்ப்பம், முக்தி வேண்டி மஹா விஷ்ணுவை வேண்ட, விஷ்ணுவோ கோடகநல்லூருக்கு சென்று தவம் செய்ய சொன்னார். அவ்வறே கார்கோடகன் முக்தி பெற்ற தலம் இது என்பதால் " கோடகநல்லூர் " என்றானது. இன்றும், இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும், நல்லோரை தீண்டுவதில்லை. மூலவர் " ஸ்ரீ கைலாசநாதராக " கிழக்கு நோக்கியும், அம்மை " சிவகாமி அம்பாளாக " தெற்கு நோக்கியும் அருள்பாளிக்கின்றனர்.
 

·         Arulmigu Sivakamiyammai sameda Kailasanadhar Temple, 
Kodaganallur (Sevvai)
·         TEMPLE LOCATION
·                It is 15km from Tirunelveli on the way to Cheranmahadevi and the temple is located near Nadukallur village. Presiding deity is Kailasanathar and Goddess Sivakamiammai . City buses available from Tirunelveli Junction Bus stand.
·        
·         POOJA DETAILS
·                Morning Pooja Time : 6.00 A.M - 12.00 P.M
·                Evening Pooja Time : 5.00 P.M - 7.00 P.M
·        
·         FESTIVALS
·                Every Month Pradhosham celebrated.
·        
·                 Maha Sivarathiri Grandly Celebrayted.
·        
·                Markali Thiruvathirai celebrated.



4.குன்னத்தூர் - ராகு - நவக்கிரகங்களில் ராகு பகவான் ஆட்சி புரியும், செங்காணி, சங்காணி என்றெல்லாம் அழைக்கப்படும் குன்னத்தூர் திருநெல்வேலியில் இருந்து மேலவேங்கடபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத் திருத் தலத்தில் சுவாமி " கைலாச நாதர், கோத பரமேஸ்வரர் " எனவும், அம்பாள் " சிவகாமி அம்மையாகவும் " வழிபடப்படுகிறார்கள். கருவறையில் கோத பரமேஸ்வரர் மார்பில் சர்ப்பம் தரித்த நிலையில் அருளுகிறார். இந்த சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. கோயிலில் நில அளவு கோல் ஒன்று உள்ளது. இது, நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாள பயன்படுத்தப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தடைபட்டு கொண்டே போகும் திருமணங்கள் இனிதே நடக்க, நல்ல மக்கட் பேறு அமைய, கால சர்ப்ப தோஷங்கள் நீங்க, உத்தியோக பிராப்தி கிட்ட, லாப ஸ்தானம் அடைய, ராகு தோஷ நிவர்த்தி பெற இத் தல வழிபாடு சிறந்தது.
 


·         Arulmigu Kotha Parameswarar Temple, 
Kunnathur (Raagu)
·         TEMPLE LOCATION
·                It is 2km from Tirunelveli Town railway station. And also very near to Thiruvengadanathapuram Kunnathaur is located in small hillock. Presiding deity is Kothai Parameswaran. Goddess Sivakamasundari.
·        
·         TEMPLE'S SPECIALITY
·                There is Nagar (snake) symbol on the Shivalinga in the temple.
·        
·         POOJA DETAILS
·                Morning Pooja Time : 7.30 A.M - 10.40 A.M
·                Evening Pooja Time : 5.00 P.M - 6.30 P.M
·                Saterday
·                Morning 6.00 A.M to 12.00 P.M
·                Evening 5.00 P.M to 8.00 P.M
·                Friday
·                Morning 6.00 A.M -12.00 P.M
·                Evening 5.00 P.M - 7.00 P.M
·        
·         FESTIVALS
·                Mahasivarathri in February-March
·        
·                Tiruvadhirai in December-January
·        
·                Tirukarthikai in November-December
·        
·                Pradosham days - 13th day either from new moon or full moon days are the festivals celebrated in the temple.

5.முறப்பநாடு - குரு - நவ கைலாயங்களில் ஐந்தாவது தலமான " முறப்ப நாடு " குரு பகவான் ஆட்சி புரியும் தலமாகும். திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நவ கைலாயங்களில் எந்த தலத்திற்க்கும் இல்லாத ஒரு சிறப்பாக, சிவ பெருமானே இங்கு "குரு பகவானாய்" அருள் புரிகிறார். தாமிரபரணி ஆறு, காசியைப் போன்றே, வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்வதால், இவ்விடம் " தட்சிண கங்கை " என்றானது. இங்கு நீராடுவது காசியில் நீராடுவதற்கு நிகர். இத் தலத்தில் ஒரே கல்லிலாலான தசாவதாரச் சிற்பம் ( மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் ) ஒன்றுள்ளது. இத் தலத்தில் உள்ள சபரி தீர்த்தத்தில், தை மாத அமாவாசைகளிலும், மாதாந்திர கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் நீராடி கைலாச நாதரை வழிபட்டால் வாழ்வில் பேரின்பம் கிட்டும். மூலவர் கைலாசநாதராகவும் , அம்பாள் சிவகாமியாகவும் அருள் புரியும் தலமாகும்.




Arulmigu Kailasa Nathar Temple, 
Murappanadu (Guru)
TEMPLE LOCATION
       It is 17km from Tirunelveli and 40km from Thoothukudi on the National Highways. It is also situated on the banks of river Tamirabarni. Presiding deity is Kailasanathar Goddess Sivakamiammal.

POOJA DETAILS
       Morning Pooja Time : 7.00 A.M - 12.00 P.M
       Evening Pooja Time : 4.30 P.M - 7.30 P.M

FESTIVALS
       Mahasivarathri in February-March

       Tiruvadhirai in December-January

       Tirukarthikai in November-December

       Gurupeyarchi days - new moon or full moon days are the festivals celebrated in the temple.

6.ஸ்ரீவைகுண்டம் - சனி நவ கைலாயங்களில் சனீஸ்வர பகவான் ஆட்சி புரியும் ஆறாவது திருத் தலமாகும். இது, குமர குருபரர் அவதரித்த புண்ணிய பூமி. பூத நாதர் மற்றும் நவக்கிரக வழிபாடுகள் சிறப்பு பெற்ற இத் தலம், சனி திசை நடப்பவர்கள் அனைவரும் தவறாமல் வந்து வணங்க வேண்டிய தலமாகும். இத் தல அம்பிகை, சிவகாமி அம்பாளாகவும், இறைவன், சுயம்புவாய் ஸ்ரீ கைலாசநாதராகவும் வீற்றிருக்கின்றனர். ஸ்ரீ வைகுண்டம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும், நவ கைலாயங்களில் ஒன்றாகவும் விளங்கும் சிறப்பு பெற்ற திருத் தலமாகும். குமர குருபரர் தன் திருவாய் மொழிந்த தலம் என்ற சிறப்பு பெற்றது.  ஆறு கால பூஜையும் மிகச் சிறப்பாக நடைபெறும், சிவ பெருமான் சனி பகவானாய் விளங்கும் இத் திருத் தலத்தில் செய்யப்படும் சனி தோஷ பரிகார வழிபாடுகள், நடைபெறாமல் தடை பட்டுக் கொண்டே வரும் திருமணங்களை இனிதே நிறைவேற்றி தரும். இழந்த செல்வங்களை மீட்டுத் தரும்.
 
Arulmigu Kailasa Nathar Temple, 
Thiruvaikundam (Sani)
TEMPLE LOCATION
       It is 30km from Tirnelveli and 40km from Thoothukudi it is also located on the river Tamirabarni. Presiding deity is Kailasanathar Goddess Sivakamiammai. The first Navathirupathi temple is located here.

POOJA DETAILS
       Morning Pooja Time : 6.00 A.M - 12.00 P.M
       Evening Pooja Time : 4.00 P.M - 7.00 P.M

FESTIVALS
       Mahasivarathri in February-March

       Tiruvadhirai in December-January

       Tirukarthikai in November-December

       Gurupeyarchi days - new moon or full moon days are the festivals celebrated in the temple.
·         Pooja NamePooja Time
·         Tiruvanathal6.00 A.M
·         Udaya Marthandam6.45 A.M
·         Sirukalasanthi8.00 A.M
·         Kalasanthi8.45 A.M
·         Uchikalam10.30 A.M
·         Sayaratchai5.30 P.M
·         Arthajamam8.30 P.M

7.தென் திருப்பேரை - புதன் - புதன் பகவான் ஆட்சி புரியும் " தென் திருப்பேரை " ஏழாவது தலமாகும். நவ கைலாயங்களில் ஒன்றான இத் தலம் நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் விளங்கும் இரட்டை சிறப்பு கொண்டது. திருநெல்வேலியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் ஸ்ரீ கைலாசநாதர். இறைவி சிவகாமி என்ற அழகிய ஸ்ரீ பொன்னம்மாள். கருவறையில் மூலவர் சிறிய லிங்க வடிவில் தாமரை மலரில் காட்சி அருள்கிறார். சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித் தனியே விமானங்கள் கொண்டிருக்கும் இத் தலம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது. கோயில் சந்நதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில், கேப்டன் துரை என்ற கலெக்டர் " கோயில் தோப்பு இளநீருக்கு என்ன கொம்பா இருக்கிறது? " என்று கேட்டு இளநீர் பறிக்க, பறித்த இளநீர் மூன்று கொம்புகளுடன் இருந்ததாம். அந்த, இளநீர்தான் இன்றும் கோயிலில் தொங்க விடப்பட்டுள்ளது.  



Arulmigu Kailasa Nathar Temple, 
Thenthirupperai (Bhudan)
TEMPLE LOCATION
       It is 38km from Tirunelveli on the way to Tiruchendur. Presiding deity is Kailasanathar .Goddess Allakiyaponamal One of the Navathrupathi temple also located here.

POOJA DETAILS
       Morning Pooja Time : 7.00 A.M - 11.00 P.M
       Evening Pooja Time : 5.00 P.M - 8.00 P.M

FESTIVALS
       Mahasivarathri in February-March

       Tiruvadhirai in December-January

       Tirukarthikai in November-December

8.ராஜபதி - கேது - நவ கைலாயங்களில் எட்டாவது திருத் தலமாக விளங்குவது, கேது பகவான் அருளாட்சி புரியும் " ராஜ கேது ". எவ்வளவு சோதனைகள் வந்தாலும், நான் தர்மத்தின் பக்கமே நிற்பேன் என்று உள்ளோருக்கு கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் கேது பகவான். நவ கைலாயங்களில் மற்ற தலங்களை போல் இல்லாது, வெட்ட வெளியில் கூரையின்றி, வானமே கூரையாக, பூமியே கோவிலாக ஒரு கற்சிலை மட்டுமே கோயிலாக உள்ளது. கோயில் இருந்த இடம் முழுவதும் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது. சிவ பெருமான் இருந்த இடத்தில் , தற்பொழுது இருக்கும் ஒரு கல்லையே மூலவராக வழிபடுகின்றனர். கோயிலாக இல்லாவிட்டாலும், இத் தலத்தை வணங்கினால் கைலாச நாதனின் அருளாசி கிடைக்கும் என்பது நிச்சயம். இத் தலத்தை வணங்கினாலோ அல்லது இத் தல நந்தி பெருமான் உள்ள ஒட்டப்பிடரத்தில் நந்திக்கு அபிஷேகம் செய்தாலோ கால் நடைகளுக்கு நோய்கள் வருவதில்லை. ட்டுள்ளது.  



Arulmigu Kailasa Nathar Temple, 
Raajapathy (Kedhu)
TEMPLE LOCATION
       It is 38km from Tirunelveli on the way to Tiruchendur near Thenthirupperai. Presiding deity is Kailasanathar Goddess Alagiya ponnamal and Sivakamiammai.
       1) Kurumbur is 40 km from Tirunelveli on the Tiruchendur road.
       2) Rajapathi is 5 km from Kurumbur on the Eral Road.
       3) From Sethu Subramaniapuram it is 25 km from Tuticorin on Nazreth Road.
       4) Rajapathy is 1 km far from Sethusubramaniapuram.

TEMPLE HISTORY
       Sage Romasa, the fist disciple of Sage Agasthya sought suggestion from his Guru for attaining total salvation ending the cycle of births and deaths. The Guru advised the disciple to place 9 flowers in the Tambirabarani River created by him and worship Lord Shiva at each place a flower touched the bank. This worship would help him realize his wish, said sage Agasthya.
       Sage Romasa followed his Guru Agasthya’s advice meticulously. The last flower touched the banks of the river in Rajapathy. Sage worshipped Lord Shiva here and realized his wish. The place is named after the palace of Pandya king belonging to the Chandra dynasty – Raja-King, Pathi-Place. The temple was ruined due to the fury of floods. With the steps taken by Shiva devotees, the new temple was built.

GREATNESS OF TEMPLE
       This is the place where Ketu worshipped Lord Shiva – Kailasanathar, hence praised as Kethu Parihara Sthala. There is only a disfigured Shiva Linga. There are four wheel figures on all sides of the Linga. It is said that there is a temple buried under this Linga. Ragu rules 7 years in a person’s life. It is advised that the person under this period worship Lord in this temple during this period. Devotees pray here for good farm yields, health, child bon, health of cattle, job opportunities and progress in trade and offer various farm produces as their prayer commitment to Lord and Mother. On Pradosha days, they offer various puja materials and fruits for the pujas.
       The temple conducts Ketu Parihara pujas between 12.00 a.m. to 1.30 p.m. on Sundays and between9.00 a.m. to 10.30 a.m. on Tuesdays with Yajnas. Devotees participate in this pujas for removal of obstacles in wedding proposals, adverse aspects of planets for cure from hyper tension, diabetics, asthma etc. They also derive benefits of child boon and other developments in life. The first puja for the consecration of Rajapathi Kailasanathar temple began on the day when the Raja Gopuram of the Kalahasthi temple was damaged. Hence, this place and temple is regarded as Then Kalahasti – Kalahasthi of South. This temple is praised equal in reputation to the Kethu Sthala in Keel Perum Pallam temple in Nagapattinam district. Along with Aadhi Kailasanathar, Lord Kailasa Nathar and Soundarya Nayaki bless the devotees from this holy soil.

POOJA DETAILS
       Morning Pooja Time : 6.00 A.M - 11.00 P.M
       Evening Pooja Time : 4.00 P.M - 8.00 P.M

FESTIVALS
       Margazhi Tiruvadhirai in December-January

       Shivrathri in February-March

       Monthly Pradoshams

       First day of each Tamil month are the festivals celebrated in the temple.


9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன் - நவக்கிரகங்களில் சுக்கிர பகவான் ஆட்சி புரியும் நவ கைலாய தலமாக விளங்குவது " சேர்ந்த பூ மங்களம் ". இத் தலத்தின் அருகில் தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. எத்தனையோ இயற்கை சீற்றங்களை இந்த ஊர் சந்தித்து இருந்தாலும், இத் திருக் கோயில் மட்டும் மிக கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அகத்திய முனிவர் ஆற்றில் விட்ட மலர்களில் ஒன்பதாவது மலர் வந்து நின்ற இடம் இது. மற்ற தலங்களை போலவே இங்கு இறைவன் ஸ்ரீ கைலாச நாதராகவும், அம்மை சிவகாமி அம்பாளாகவும் அருளுகின்றனர். திருச் சுற்றில் தட்சிணா மூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் , நவக்கிரகங்கள் மற்றும் சனீஸ்வரர் ஆகியோர் தனி சந்நதி கொண்டு அருள்பாளிக்கின்றனர்.  இறைவன் சந்நதி கிழக்கு நோக்கியும், அம்பாள் சந்நதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ள இத் திருத்தல வழிபாட்டினால் சுக்கிர யோகம் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.  


Arulmigu Kailasa Nathar Temple 
Serndhapoomangalam (Sukiran)
TEMPLE LOCATION
       It is 20km km from Thoothukudi on the way to Tiruchendur near Athoor and Ponnakayal. Presiding deity is Kailasanathar Goddess Sivakami Ammai. City bus available from Thoothukudi Old bus stand.

TEMPLE HISTORY
       During the Shiva-Parvathi wedding in Mount Kailash, due to the huge gathering of sages to attend the divine event, north went down in level and south rose up equally. To balance the earth level, Sage Agasthya came to south. His first disciple, Sage Romasa had a desire to install Shivalingas in this place. As suggested by his Guru Agasthya, he let nine lotus flowers flow in Tambirabarani and installed Shivalingas at each place when a flower touched the bank. The last and the ninth flower reached this place – Serndhapoomangalam.

GREATNESS OF TEMPLE
       The idol of Kubera on an elephant is sculpted on the Vimana above the sanctum sanctorum with his two consorts – Sanganidhi and Padmanidhi. This is the only temple with Kubera the Lord of Wealth in this posture. Lord Kailasa Nathar graces from the sanctum sanctorum with Shukra-Venus characteristics. Mother Azhagia Ponnammai is facing south. Devotees believe that worshipping Kubera would bring them prosperity. Those not having an advantageous aspect of Shukra in their horoscopes, pray to Shukra in the manner mentioned above (see prayer commitment).
       Papanasam is the first of the Nava Kailash Temples. Tambirabarani River begins its flow from the Pothigai hills here and confluences with Punnakayal sea face in this place. On the new moon days in the months of Aadi and Thai – July-August and January-February respectively, special pujas are dedicated to Lord Kailasanathar.

POOJA DETAILS
       Morning Pooja Time : 7.00 A.M - 9.30 A.M
       Evening Pooja Time : 5.30 P.M - 7.30 P.M

FESTIVALS
       New Moon days in the month of Aadi-July-August and Thai-January February

       monthly pradoshams and Maha Shivrathri in February-March are the days of special pujas and festivals in the temple

No comments:

Post a Comment